சுடச்சுட

  

  நெய்வேலி அருகே விஷவாயு தாக்கி என்.எல்.சி ஒப்பந்த தொழிலாளர்கள் 2 பேர் பலி

  By kirthika  |   Published on : 26th May 2016 12:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர்: நெய்வேலி அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் அவுசிக் கோர்ஸ் பிரிவில் ஒப்பந்த தொழிலாளியாக, திடீர்குப்பம் வட்டம் 30-ல் வசித்து வந்த தங்கராஜ் (46), சின்னதுரை (37) ஆகிய இருவரும் பணியாற்றி வந்தனர்.

  இன்று காலை வட்டம் 15 சி.எஸ்.ஐ.எப். குடியிருப்பு அருகேயுள்ள கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய இறங்கியபோது விஷவாயு தாக்கி இருவரும் உயிரிழந்தனர்.

  பிரேதத்தை கைபற்றி அவர்களின் உடலை நெய்வேலி பினவறையில் வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் உறவினர்கள் 25 லட்சம் இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்திர வேலை, சட்டப்படி நிவாரண இழப்பீட்டு தொகையை என்.எல்.சி நிர்வாகம் வழங்க வேண்டும் என போராட்டம் நடத்தி வருகின்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai