Enable Javscript for better performance
விடைபெற்றார் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் அஜய் குமார் சிங்- Dinamani

சுடச்சுட

    

    விடைபெற்றார் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் அஜய் குமார் சிங்

    By kirthika  |   Published on : 26th May 2016 12:14 PM  |   அ+அ அ-   |    |  

    புதுச்சேரி: புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்த அஜய் குமார் சிங் இன்றுடன் விடைபெற்றார். புதுச்சேரியின் புதிய துணைநிலை ஆளுநராக கிரன்பேடி வரும் 29-ம் பதவியேற்கிறார்.

    புதுச்சேரி போலீசார் அணிவகுப்பு மரியாதையுடன் ஏ.கே சிங்கிற்கு வழிஅனுப்பும் விழா நடைபெற்றது. புதிய ஆளுநராக கிரண் பேடி நியமிக்கப்பட்டதால் அந்தமான் ஆளுநர் ஏ.கே சிங் விடைபெற்றுள்ளார்.

    இவர், கடந்த 2014 ஜுலை முதல் புதுச்சேரி ஆளுநர் பொறுப்பையும் கவனித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரியின் புதிய ஆளுநராக கிரண்பேடி வரும் 29-ம் மாலை 6.30 மணிக்கு பதவியேற்றுக் கொள்கிறார். இவருக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே கவுல் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai