ராடியாவின் டேப்பை பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை: ஜி.கே. பிள்ளை

புது தில்லி, டிச. 11: நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் அடங்கிய டேப்பை பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை என்று உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை (படம்) கூறியுள்ளார். முன்னதாக ராடியா பல்வேறு தரப்பினருடன் பேசிய
ராடியாவின் டேப்பை பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை: ஜி.கே. பிள்ளை
Published on
Updated on
1 min read

புது தில்லி, டிச. 11: நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல் அடங்கிய டேப்பை பார்த்ததுமில்லை, கேட்டதுமில்லை என்று உள்துறை செயலர் ஜி.கே. பிள்ளை (படம்) கூறியுள்ளார்.

முன்னதாக ராடியா பல்வேறு தரப்பினருடன் பேசிய தொலைபேசி உரையாடல் பதிவுகளை, மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தின் ஒப்புதலின் பேரில் ஜி.கே. பிள்ளை  வெளியிட்டார் என்று செய்திகள் வெளியானது.

இந்நிலையில் "வாôல்ஸ்ட்ரீட்' பத்திரிகைக்கு ஜி.கே. பிள்ளை, சனிக்கிழமை அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பது: நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய டேப், அது வெளியான சம்பவத்துக்கும், உள்துறை அமைச்சகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இனி இதுதொடர்பான விஷயத்தில் அமைச்சகம் தலையிடாது.

வரி ஏய்ப்பு, அளவுக்கு அதிகமான சொத்து குவிப்பு ஹவாலா பண மோசடி உள்ளிட்ட விஷயங்களைக் கண்டறிவதற்காக நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்களை வருமான வரித்துறையினர்தான் பதிவு செய்துள்ளனர். வருமான வரித்துறை நிதியமைச்சகத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் வருகிறது. எனவே உள்துறை அமைச்சகத்துக்கும் இதற்கும் தொடர்பில்லை என்றார் அவர்.

இந்த டேப்பின் ஒருபகுதியை விசாரணைக்காக சிபிஐ வசம் ஒப்படைத்ததாக மத்திய நிதியமைச்சகம் ஏற்கெனவே கூறியுள்ளது. வரி ஏய்ப்பு, சொத்து குவிப்பு போன்வற்றைக் கண்டறிய ராடியாவின் பேச்சு பதியப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் இதுதொடர்பான பேச்சுகள் அந்த டேப்பில் இருந்ததாக இதுவரை பத்திரிகைகளில் செய்திகள் வரவில்லை.

உள்துறை அமைச்சரின் சார்பில் நான் தான் இந்த டேப்புகளை வெளியிட்டேன் என்று கூறுகிறார்கள். இது எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாத தவறான குற்றச்சாட்டு. எங்கள் அமைச்சகத்துக்கும் இதற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்திவிட்டேன் என்று ஜி.கே.பிள்ளை மேலும் தெரிவித்தார்.

அரசியல் தரகராக செயல்பட்ட நீரா ராடியா, முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, தொழிலதிபர் ரத்தன் டாடா உள்ளிட்ட பலரிடம் தொலைபேசியில் உரையாடியது பத்திரிகைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் மூலம் 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு விவகாரம் சூடுபிடித்தது. அரசியல், தொழில்துறையில் மேல்மட்ட அளவில் நடக்கும் தில்லுமுல்லுகளின் ஒருபகுதியும் வெளிச்சத்துக்கு வந்தது.

தான் ராடியாவுடன் பேசிய உரையாடல்கள் வெளியாகாமல் தடுக்க வேண்டுமென கோரி வேண்டுமென ரத்தன் டாடா, உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இது தொடர்பாக விசாரணை நடத்துகிறோம், ஆனால் டேப் வெளியானதைத் திரும்பப் பெற முடியாது என்று மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மறுஆய்வு மனுவில் கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.