கல்வித்தகுதிகளை மின்னணு வடிவில் பதிவு செய்ய தேசிய அளவிலான தகவல் தளம்

புதுதில்லி, ஜன.12:  கல்வித்தகுதிகளை மின்னணு வடிவத்தில் பதிவு செய்ய தேசிய அளவிலான தகவல் தளம் உருவாக்கப்படுகிறது. இதற்கான பணியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் புதுதில்லியில் செவ்வா
கல்வித்தகுதிகளை மின்னணு வடிவில் பதிவு செய்ய தேசிய அளவிலான தகவல் தளம்

புதுதில்லி, ஜன.12:  கல்வித்தகுதிகளை மின்னணு வடிவத்தில் பதிவு செய்ய தேசிய அளவிலான தகவல் தளம் உருவாக்கப்படுகிறது. இதற்கான பணியை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் புதுதில்லியில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்தார்.

நம்பகத் தன்மை, உண்மைத் தன்மை, ரகசியம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையில் சான்றிதழ்களை மின்னணு வடிவத்தில் மாற்றுவது இந்தத்திட்டத்தின் பணியாகும்.

÷ கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு இது உதவியாக இருக்கும். இதன் மூலம் ஆன்லைனில் கல்வித்தகுதிகள் குறித்து அறிந்து கொள்வதுடன், கல்வித்தகுதிக்கான சான்றிதழ்களைப் பெற கல்வி நிறுவனங்களை அணுகவேண்டிய தேவை இருக்காது.

÷மின்னணு வடிவில் பராமரிக்கப்படுவதால் சான்றிதழ்கள் மற்றும் மதிப்பெண் பட்டியலில் முறைகேடுகள் செய்வது ஒழிக்கப்படும். இதற்காக கான்பூர் ஐ.ஐ.டி.யின் இயக்குநரும், பேராசிரியருமான சஞ்சய் தாண்டே தலைமையில் பணிக்குழு ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அமைத்துள்ளது.

÷மின்னணு வடிவத்தை எலக்ட்ரானிக் நிறுவனத்தில் பதிவு செய்து பராமரித்து வைப்பதற்கான செயல் திட்டத்தை இந்தப் பணிக்குழு தயாரிக்கும். இக்குழு தனது பரிந்துரைகளை வரும் மார்ச் 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com