காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஸ்ரீநகர், ஜன.12: தெற்கு காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொன்றனர். ÷புல்வாமா மாவட்டம் அபாமா கெல்லர் கிராமத்தில் ஹிஸ்புல் பயங்

ஸ்ரீநகர், ஜன.12: தெற்கு காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதியை பாதுகாப்புப் படையினர் செவ்வாய்க்கிழமை சுட்டுக்கொன்றனர்.

÷புல்வாமா மாவட்டம் அபாமா கெல்லர் கிராமத்தில் ஹிஸ்புல் பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்த இரு தீவிரவாதிகள் ஒரு வீட்டில் பதுங்கியிருப்பதாக போலீஸôருக்கு திங்கள்கிழமை தகவல் கிடைத்தது.

÷ இதையடுத்து போலீஸôரும், பாதுகாப்பு படையினரும் அங்கு விரைந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் திருப்பி சுட்டதில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com