கோவையில் த‌மிழ் இணைய‌ மாநாடு 2010

கோவையில் த‌மிழ் இணைய‌ மாநாடு 2010 செம்மொழி மாநாட்டோடு இணைந்து ந‌டைபெற‌வுள்ள‌து. இது குறித்து உலகத் தமிழ் தொழில் நுட்பமன்றத்தின் (உத்தமம்)தலைவர் தி.ந.ச.வெங்கடரங்கன் மற்றும் செயல் இயக்குனர் சிங்கப்பூர்

கோவையில் த‌மிழ் இணைய‌ மாநாடு 2010 செம்மொழி மாநாட்டோடு இணைந்து ந‌டைபெற‌வுள்ள‌து. இது குறித்து உலகத் தமிழ் தொழில் நுட்பமன்றத்தின் (உத்தமம்)தலைவர் தி.ந.ச.வெங்கடரங்கன் மற்றும் செயல் இயக்குனர் சிங்கப்பூர் மணியம் தெரிவித்துள்ள விப‌ர‌மாவ‌து:‍-

 

"இணையம் வளர்க்கும் தமிழ்” என்பது இந்த மாநாட்டின் மையக் கருத்தாக இருக்கும். இந்த மாநாடு குறித்து  உத்தமம் அமைப்பின் தலைவர் தி.ந.ச.வெங்கடரங்கன்  “எப்படி சென்னையில் 1999ல் நடந்த தமிழ் இணைய மாநாடு அடுத்த பத்தாண்டில் வந்த பல்வேறு தமிழ் கணினி ஆராய்ச்சி, வளர்ச்சிக்கு வழி வகுத்ததோ, அதுப் போல கோவையில் இந்தாண்டு நடைப்பெறவுள்ள ஒன்பதாவது  தமிழ் இணைய மாநாடு இணையத் தமிழ் வளர்ச்சிக்கு வருங்காலத்திலுள்ள வாய்ப்புகளை ஆராய்ந்து, அதற்கு தேவையான செயல்திட்டங்களை வகுக்கும்” என்று தெரிவித்தார்.

தமிழக அரசின் சார்பில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு கோவையில் வரும் சூன் மாதம் 23ம் நாளிலிருந்து 27ம் நாள் வரை நடக்கவிருப்பதைத் தாங்கள் அறிந்திருப்பீர்கள்! இக்கருத்தரங்கோடு இணைந்து உத்தமம் தனது ஒன்பதாவது தமிழ் இணைய மாநாட்டையும் நடத்த இசைந்துள்ளது.

தமிழ் தகவல் தொழில்நுட்பத்தில் ஏற்பட்டுவரும் வளர்ச்சிகளையும், சவால்களையும் குறித்து கருத்துக்களைப்  பரிமாறிக்கொள்ளவும் தீர்வுகளை நோக்கி முன்னேறவும்  அவ்வப்போது  சர்வதேச அளவில் தமிழ் இணைய மாநாடுகளுக்கு உத்தமம் அமைப்பு ஏற்பாடு செய்து வருகிறது. தமிழ்த் தகவல் தொழில்நுட்பம் குறித்து தொடர்ந்து சர்வதேச அளவில் மாநாடுகளை உத்தமம் அமைப்பு மட்டுமே நடத்தி வந்துள்ளது. இதுவரை சென்னை (1999, 2003), சிங்கப்பூர் (1997 ,2000, 2004) மலேசியா (2001), அமெரிக்கா (2002), ஜெர்மனி (2009) ஆகிய நாடுகளில் தமிழ் இணைய மாநாடுகள் நடந்துள்ளன.

மாநாடு கருத்தரங்கம், சமுதாய குழுமம், கண்காட்சி ஆகிய மூன்று சிறப்புக் கூறுகளைக் கொண்ட முழு அளவிலான தமிழ் இணைய மாநாடாக 2010 விளங்கும்.தமிழ்க் கணினியம், தமிழ் இணையம் ஆகியவற்றின் அண்மைக்கால முன்னேற்றங்கள், சவால்கள் குறித்து அலசி ஆராயும் தொழில் நுட்பக் குழுவாக மாநாட்டு அரங்குகள் விளங்கும்.

இந்த மாநாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறன்றன. உலகெங்கிலுமிருந்து தகவல் தொழில்நுட்பத் துறை வல்லுநர்கள் பங்கேற்க உள்ளார்கள். விரிவான விவாதங்களுக்குப் போதுமான நேரம் கிடைக்க ஏதுவாக 300 பேராளர்கள் மட்டுமே மாநாட்டில் பங்கேற்க வகை செய்யப்பட்டுள்ளது.

 

 மாநாட்டுக்கான இணையதள முகவரி: ww.infitt.org/tic2010 .

கட்டுரைச் சுருக்கத்தின் அமைப்பு

உங்கள் கட்டுரைச் சுருக்கம் உங்களுடைய அல்லது உங்களுடைய கூட்டு ஆய்வாளர்களின் சுய ஆய்வு குறித்தானதாக இருக்கவேண்டும். இவ்வாய்வு கணினியில் தமிழ் பயன்பாடு பற்றிய எந்த ஒரு தலைப்பிலாவது இருக்கலாம். இது தமிழ் மொழியைப் பற்றி மட்டுமோ அல்லது கணினியைப் பற்றி மட்டுமோ இல்லாமல் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம், தமிழ்ப் பல்லூடகம் போன்ற துறைகள் எப்படியெல்லாம் கணினி, கையடக்கத் தொலைபேசி போன்ற மின்சாதனங்களில் பயன்படுத்தப்படுகின்றன என்பன பற்றி ஏதாவது ஒரு தலைப்பில் இருக்கலாம்.

 

உங்களின் கட்டுரைச் சுருக்கம் ஒரு பக்கத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். தமிழில் இருந்தால் அது ஒருங்குறியில்தான் இருக்கவேண்டும் என்பதை மனதில் கொள்ளுங்கள். நீங்கள் வேறு எழுத்துருவில் தட்டச்சுச் செய்ய நேரிட்டால் அதை நீங்களே ஏதாவது ஒரு உருமாற்றுக் கனிமத்தைப் பயன்படுத்தி ஒருங்குறியின் எழுத்துருவுக்கு மாற்றி எங்களுக்கு அனுப்பும்படி கேட்டுக்கொள்கிறோம்.

தங்களின் கட்டுரைச் சுருக்கம் கருத்தரங்கில் படிக்க ஏற்றுக்கொள்ளப்பட்டதெனில் தங்களின் ஆய்வுக்கட்டுரையை ஆறு பக்கத்திற்கு மிகாமல் கீழ்க்குறிப்பிட்ட நாளுக்குள் அனுப்பவேண்டும். ஆய்வுக்கட்டுரையில் தாங்கள் கொடுத்துள்ள விவரங்கள் கட்டுரைச்சுருக்கத்தில் தாங்கள் குறிப்பிட்டபடியே இருக்கவேண்டும்.

இவ்வகையில் தங்களின் கட்டுரைச் சுருக்கத்தையும் அதன் பின் தாங்கள் அனுப்பும் ஆய்வுக் கட்டுரையையும் பரிந்துரைக் குழுவினர் தர நிர்ணயம் செய்வர் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

 

இரண்டுமே ஏற்புடையதாக இருக்கும் தருணத்தில்தான் தங்களின் கட்டுரையைக் கருத்தரங்கில் படிக்க அனுமதி அளிக்கப்படும். மேலும் தங்களின் கட்டுரையைக் கருத்தரங்கில் முப்பது நிமிடங்களுக்குள் படிக்கவேண்டும். இதற்குத்தக தங்களின் படைப்பு விவரங்களைத் தாங்களே ஏற்பாடு செய்துகொள்வது அவசியம். கட்டுரைச் சுருக்கமும் கட்டுரையும் மின்வடிவில்தான் தாங்கள் எங்களுக்கு அனுப்பேவண்டும், இவற்றை அச்சுப்பிரதியாகப் பெற்றுக்கொள்ள இயலாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம். கட்டுரை படைப்பாளர்கள்தான் தங்களுடைய கட்டுரையைக் கருத்தரங்கில் படிக்க இயலும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.

கணினி வழி தமிழ் செய்வோம்! தமிழ் இணையம் வழி இணைவோம் இப்புவிதனிலே!

 

இத்தமிழ் இணைய மாநாட்டில் தங்களது ஆய்வுக் கட்டுரையைப் படிக்க விரும்புவோர் ஒரு பக்க அளவிலான கட்டுரைச் சுருக்கத்தை ஆங்கிலத்திலோ தமிழிலோ தட்டச்சுச் செய்து கீழ்க்கண்ட விவரப்படி  ti2010-cpc@infitt.org     என்னும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

a.. கட்டுரைச் சுருக்கம் அனுப்பவேண்டிய இறுதி நாள் பிப்ரவரி மாதம் 15ம் நாள், 2010.

  b.. கட்டுரைச் சுருக்கம் குறித்தான எங்களின் முடிவு மார்ச்சு மாதம் 5ம் நாள், 2010 அன்றுக்குள் தெரிவிக்கப்படும்.

  c.. முழுக் கட்டுரையை அனுப்பவேண்டிய கடைசி நாள் ஏப்ரல் மாதம் முதல் தேதி, 2010.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com