சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க கெளடா முயற்சி: எடியூரப்பா

பெங்களூர், ஜன.12: மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகெüடா ஈடுபட்டுள்ளார் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா குற்றம்சாட்டினார். ÷பெங்களூரில் செவ்வாய்க்கிழம
சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க கெளடா முயற்சி: எடியூரப்பா

பெங்களூர், ஜன.12: மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சியில் முன்னாள் பிரதமர் எச்.டி.தேவகெüடா ஈடுபட்டுள்ளார் என்று முதல்வர் பி.எஸ். எடியூரப்பா குற்றம்சாட்டினார்.

÷பெங்களூரில் செவ்வாய்க்கிழமை நிருபர்களுக்குப் பேட்டியளித்த அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

÷மாநிலத்தின் ஒட்டுமொத்த விவசாயிகள் பிரச்னை குறித்து தேவகெüடாவால் பேச முடியவில்லை. அவரால் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்ட பெங்களூர்-மைசூர் விரைவுப்பாதைத் திட்டத்தை மட்டுமே கையில் எடுத்துக் கொண்டு போராட்டம் நடத்தி வருகிறார் கெüடா.

÷இதற்கு என்ன காரணம் என்பதை கெüடா அறிவிக்க வேண்டும். கர்நாடகத்தில் எனது தலைமையில் அமைதியான முறையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இது கெüடாவுக்கு பொறுக்கவில்லை என்று கருதுகிறேன்.

÷இதனால்தான் எப்படியாவது இந்த அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கெüடா இவ்வாறு வீதியில் இறங்கி போராட்டம் நடத்தி வருகிறார்.

÷மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை சீர்குலைக்க வேண்டும் என்பதே கெüடாவின் முக்கிய குறிக்கோளாக இருக்கும் எனத்தெரிகிறது. ஆனால் அவரது செயலை கர்நாடக மக்கள் புரிந்து வைத்துள்ளனர். தனக்கு எப்போதெல்லாம் பாதிப்பு ஏற்படுகிறதோ அப்போதெல்லாம் இதுபோன்ற நாடகத்தை கெüடா அரங்கேற்றுவார்.

÷எனவே, அவரது போராட்டம் பற்றி கவலைப்படத் தேவையில்லை. விவசாயிகள் நலனில் இந்த அரசுக்கு அக்கறை உள்ளது என்பதை மக்கள் புரிந்து வைத்துள்ளார்கள்.

அதிகாரம் இல்லையே என்ற ஆதங்கத்தில் கெüடா இதுபோல் நடந்து கொள்கிறார் என்றார் எடியூரப்பா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com