சிமி இயக்கத்தை தடை செய்ய குரல் கொடுத்தேன்:

போபால், ஜன. 12: சிமி, பஜ்ரங்தள் இயக்கங்களைத் தடை செய்வதற்கு முதன் முதலில் குரல் கொடுத்த முதல்வர் நான்தான் என முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் பொது செயலாளருமான திக்விஜய்சிங் செவ்வாய்க்கிழமை கூறினார்.  மத
சிமி இயக்கத்தை தடை செய்ய குரல் கொடுத்தேன்:

போபால், ஜன. 12: சிமி, பஜ்ரங்தள் இயக்கங்களைத் தடை செய்வதற்கு முதன் முதலில் குரல் கொடுத்த முதல்வர் நான்தான் என முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் பொது செயலாளருமான திக்விஜய்சிங் செவ்வாய்க்கிழமை கூறினார்.

 மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் உமாசங்கர் குப்தா, இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம் (சிமி) மத்தியப் பிரதேசத்தில் திக்விஜய்சிங் ஆட்சியில்தான் வேரூன்றி வளர்ந்தது என ஞாயிற்றுக்கிழமை குற்றஞ்சாட்டினார். இதனை திக்விஜய்சிங் மறுத்துள்ளார்.

 மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் நிருபர்களிடம் மேலும் அவர் கூறியது:

 அமைச்சர் உமாசங்கர் குப்தாவின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது.  சிமி இயக்கத்தை தடை செய்ய கோரிய என்னை, உண்மைக்கு மாறாக மத்தியப் பிரதேசத்தில் சிமியின் வளர்ச்சிக்கு உதவினேன் எனக் கூறுவது சரியல்ல என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com