நீதித்துறை சுதந்திரம் காப்பாற்றப்படவேண்டும்: மொய்லி

புதுதில்லி, ஜன. 12: இந்திய தலைமை நீதிபதியும் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு உட்பட்டவரே என தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு பிறப்பித்துள்ள நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் காப்பாற்றப்படவேண்டும் என்
நீதித்துறை சுதந்திரம் காப்பாற்றப்படவேண்டும்: மொய்லி

புதுதில்லி, ஜன. 12: இந்திய தலைமை நீதிபதியும் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு உட்பட்டவரே என தில்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு பிறப்பித்துள்ள நிலையில், நீதித்துறையின் சுதந்திரம் காப்பாற்றப்படவேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார் மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.

 இது தொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது: நீதித்துறையின் சுதந்திரத்துக்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அது பற்றி உள்ளே சென்று ஆராய வேண்டியது அவசியம். தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பை தர்மசங்கடமாக கருதவில்லை. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய வழி உள்ளது.

 நீதித்துறையின் சுதந்திரம் நமது நாட்டுக்கு முக்கியமானது என்பதை மறந்துவிடக் கூடாது. மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இதுதான் நமது நாட்டின் தனி முத்திரை என்று கூட பெருமையாக சொல்லலாம்.

 நீதித்துறைக்கு சுதந்திரம் தரப்பட்டுள்ளது. அதற்கு பாதிப்பு ஏற்படுகிறது என்றால் அது பற்றி ஆராயவேண்டியது அவசியம். இது போன்ற தீர்ப்புகள் வழக்கமான ஒன்றுதான். இந்த பிரச்னையில் தில்லி உயர் நீதிமன்றம் விரிவாக விளக்கம் அளி

த்துள்ளது. இது பற்றி அதிர்ச்சி அடையவோ கலக்கம் கொள்ளவோ தேவையில்லை. உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பற்றி கருத்து கூற விரும்பவில்லை. தீர்ப்பின் முழு விவரம் கிடைத்த பிறகுதான் எல்லாம் புரியும் என்றார் வீரப்ப மொய்லி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com