பயங்கரவாதிகள் தாக்கும் அபாயம்: 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புது தில்லி,ஜன.12: தில்லி உள்பட 7 மாநிலங்களுக்கு பயங்கரவாதத் தாக்குதல் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு.  குடியசுத் தினம் (ஜனவரி 26) நெருங்கிவரும் நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி அமைத
பயங்கரவாதிகள் தாக்கும் அபாயம்: 7 மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புது தில்லி,ஜன.12: தில்லி உள்பட 7 மாநிலங்களுக்கு பயங்கரவாதத் தாக்குதல் அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது மத்திய அரசு.

 குடியசுத் தினம் (ஜனவரி 26) நெருங்கிவரும் நிலையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி அமைதியை சீர்குலைக்கும் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக புலனாய்வுத் துறைக்கு தெரியவந்துள்ளது.

 பயங்கரவாதிகளும், அவர்களை வழிநடத்துபவர்களும் சமீபத்தில் தங்களுக்குள் தொலைபேசி மூலம் தகவல்களை பரிமாறியுள்ளனர். இந்த உரையாடல் தகவல்களை பதிவு செய்து புலனாய்வுத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் பயங்கரவாதிகள் தாக்குல் நடத்த திட்டமிட்டுள்ளது உறுதியாகியது.

 இதையடுத்து பயங்கரவாத அச்சுறுத்தல் உள்ள 7 மாநிலங்களுக்கு உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை விடுத்து, பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்களையும் அளித்துள்ளது.

 தில்லி, மேற்கு வங்கம், பிகார், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம், கர்நாடகம், அசாம் ஆகிய மாநிலங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 பயங்கரவாதிகள் தாக்கும் அபாயம் உள்ளதால் அவர்களது சதித் திட்டத்தை முறியடிக்கும் விதத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு இந்த மாநிலங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

 இந்த எச்சரிக்கையை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. அச்சுறுத்தல் உள்ள மாநிலங்கள் தங்களது முக்கிய நகரங்கள், மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

 பயங்கரவாத அச்சுறுத்தல் குறித்த தகவல் கிடைத்ததுமே நாட்டின் தலைநகரான தில்லியில் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கான அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புறநகர் பகுதியில் பாதுகாப்புப் படை வீரர்கள் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 முக்கிய அலுவலகங்கள், வணிக வளாகங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ளும் கூட்டங்கள் பலத்த பாதுகாப்பு எல்லைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com