பிகாரில் கட்டட இயந்திரங்களுக்கு தீ வைப்பு: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

மோத்திஹரி, ஜன.12: பிகார் மாநிலம் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் கட்டட இயந்திரங்களுக்கு மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை தீ வைத்தனர். இங்குள்ள சமோதோலா ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. திங
பிகாரில் கட்டட இயந்திரங்களுக்கு தீ வைப்பு: மாவோயிஸ்டுகள் அட்டூழியம்

மோத்திஹரி, ஜன.12: பிகார் மாநிலம் கிழக்கு சம்பரன் மாவட்டத்தில் கட்டட இயந்திரங்களுக்கு மாவோயிஸ்டுகள் திங்கள்கிழமை தீ வைத்தனர்.

இங்குள்ள சமோதோலா ஆற்றின் குறுக்கே பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை இரவு நவீன ஆயுதங்களுடன் இங்கு வந்த 50 மாவோயிஸ்டுகள் அங்கு தங்கியிருந்த தொழிலாளர்களை வெளியேற்றிவிட்டு, பாலம் கட்டும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இயந்திரங்களை துப்பாக்கியால் சுட்டு தீ வைத்தனர்.

ஜெனரேட்டர், உருளை இயந்திரம், கலவை இயந்திரம் உள்ளிட்டவை அங்கு வைக்கப்பட்டிருந்தன. இந்த பாலம் கட்டும் பணியை தனியார் நிறுவனம் ஒன்று செய்து வருகிறது என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உமேஷ் குமார் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com