பிகார் மாநில அமைச்சருக்கு தொலைபேசியில் கொலைமிரட்டல்

பாட்னா, ஜன. 12: தன்னையும், தனது குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவதாக தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளதாக பிகார் மாநில அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அஷ்வின் செüபே தெரிவித்துள்ளார்.  நிருபர்களிடம் செ

பாட்னா, ஜன. 12: தன்னையும், தனது குடும்பத்தாரையும் கொலை செய்து விடுவதாக தொலைபேசியில் மிரட்டல் வந்துள்ளதாக பிகார் மாநில அமைச்சரும், பாஜக மூத்த தலைவருமான அஷ்வின் செüபே தெரிவித்துள்ளார்.

 நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:

 எனது வீட்டில் உள்ள தொலைபேசிக்கு ஒரு குறிப்பிட்ட செல்போன் எண்ணில் இருந்து திங்கள்கிழமை நள்ளிரவில் அடிக்கடி மிரட்டல் அழைப்பு வந்தது. காலையிலும் அவர் கொலைமிரட்டல் விடுத்தார்.

 அதில் பேசியவர் மாவோயிஸ்டு அமைப்பைச் சேர்ந்தவர் என்றும், எனது பெயர் கான்பாய் என்றும் கூறினார்.

 தொலைபேசியில் பேசிய போது அந்த நபர் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, கொலைமிரட்டலும் விடுத்தார். இதனால் எனது குடும்பத்தார் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுபற்றி காவல் கண்காணிப்பாளர் வினித் விநாயக்கிடம் தெரிவித்தேன் என்றார் அவர்.

 இதையடுத்து அவரது வீட்டிற்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட செல்போன் எண்ணில் பேசிய நபர் குறித்தும் போலீஸôர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com