ரத்தோர் முன்ஜாமீன் மனு:சிபிஐக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

சண்டீகர், ஜன. 12: டென்னிஸ் வீராங்கனை ருசிகாவை மானபங்கம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் டிஜிபி ரத்தோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, சிபிஐ போலீஸôருக்கு நோட்டீஸ் அன

சண்டீகர், ஜன. 12: டென்னிஸ் வீராங்கனை ருசிகாவை மானபங்கம் செய்ததாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் டிஜிபி ரத்தோர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு, சிபிஐ போலீஸôருக்கு நோட்டீஸ் அனுப்ப பஞ்சாப்-ஹிரியாணா உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

÷அதேநேரத்தில், பதில் மனு தாக்கல் செய்யும் வரை ரத்தோரை கைது செய்வதற்கு இடைக்கால தடை விதிக்க நீதிபதிகள் மறுத்திவிட்டனர்.

÷ஹரியாணா போலீஸôர் வசமிருந்து இந்த வழக்கு எங்களுக்கு (சிபிஐ) மாற்றப்பட்டு, ரத்தோர் மீது தொடரப்பட்ட 3 வழக்குகளும் செவ்வாய்க்கிழமை மாலைதான் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனவே முன்ஜாமீன் மனுவுக்குப் பதிலளிக்க ஒரு வாரகாலம் அவகாசம் தேவை  என்று சிபிஐ தரப்பில் கோரப்பட்டது.

÷இதையடுத்து, சிபிஐ சார்பில் வரும் 18-ம் தேதி  பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி சபினா உத்தரவிட்டார்.

÷ரத்தோர் சார்பில் அவரது வழக்கறிஞர் மனைவி அபா வாதிட்டார். சிபிஐ பதில் மனு தாக்கல் செய்யும்வரை ரத்தோரை கைது செய்ய தடை விதிக்க வேண்டும் என்று அவர் கோரினார். ஆனால் அவரது கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை.

÷ருசிகாவை தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட 3-வது வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் ரத்தோர் தரப்பில் கோரப்பட்டது. 1990- ஆண்டில் 14 வயது டென்னிஸ் வீராங்கனை ருசிகாவை மானபங்கப்படுத்தியதாக அப்போது போலீஸ் ஐஜியாக இருந்த ரத்தோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

÷இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து தனது அதிகார பலத்தைக் கொண்டு ரத்தோர் ருசிகாவையும் அவரது குடும்பத்தினரையும்

துன்புறுத்தியதாகவும் அதனால் தான் 1993-ம் ஆண்டு ருசிகா தற்கொலை செய்து கொண்டார் என்றும் ரத்தோர் மீது புகார் கூறப்பட்டது.

÷இந்த வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று ரத்தோருக்கு 6 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி சாட்சியங்களை குலைத்துவிட்டார். இதனால் அவருக்கு குறைந்தளவு தண்டனைதான் கிடைத்துள்ளது. எனவே இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று ஹரியாணா முதல்வர் ஹூடாவிடம் முறையிடப்பட்டது. இதையடுத்து இந்த வழக்கு தற்போது மீண்டும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே தனக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனையை எதிர்த்து ரத்தோர் தாக்கல் செய்த மனுவை செஷன்ஸ் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com