வட இந்தியாவில் கடும் குளிர்: 290 பேர் பலி

புது தில்லி, ஜன. 12: வட இந்தியாவில் கடும் குளிருக்கு இதுவரை 290 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் இறந்தோர் எண்ணிக்கை 264 ஆக உயர்ந்துள்ளது. ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப்
வட இந்தியாவில் கடும் குளிர்: 290 பேர் பலி

புது தில்லி, ஜன. 12: வட இந்தியாவில் கடும் குளிருக்கு இதுவரை 290 பேர் பலியாகியுள்ளனர். குறிப்பாக உத்தரப் பிரதேசத்தில் மட்டும் இறந்தோர் எண்ணிக்கை 264 ஆக உயர்ந்துள்ளது.

ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சலப் பிரதேசத்தில் மிகவும் மோசமாக மைனஸ் டிகிரிக்கும் குறைவாக வெப்பம் பதிவாகியதால், கடும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. கடும் குளிருடன் அதிகமாக பனிப் பொழிவும் இருப்பதால் மக்கள் நடமாட்டம் வெகுவாகக் குறைந்துள்ளது.

ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளில் பகல்நேர வெப்பம் வெகுவாகக் குறைந்துள்ளது. ஜம்முவில் இரவு நேர வெப்பநிலை 4 டிகிரி செல்சியஸிலிருந்து 2.7 டிகிரி செல்சியஸôகக் குறைந்துள்ளது. மாநிலத்திலேயே மிகவும் குறைந்தபட்சமாக பனிஹாலில்

மைனஸ் 1.6 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியது. இருப்பினும் காஷ்மீர் பள்ளத்தாக்கில் இரவு நேர வெப்பநிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

பனிப் பொழிவில் சிக்கியுள்ள லடாக்கில் இரவு நேர வெப்பநிலை மைனஸ் 22 டிகிரி செல்சியஸôக பதிவாகியது. லே மற்றும் கார்கிலிலும் இதேநிலை நீடிக்கிறது.

பஞ்சாப், ஹரியாணா, சண்டீகர் உள்ளிட்ட வட மாநிலங்களிலும் இதே நிலை நீடிக்கிறது. தில்லியில் கடும் குளிருடன் பனிக் காற்றும் வீசுவதால் செவ்வாய்க்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸôக பதிவாகியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com