வெளிநாடு வாழ் இந்தியருக்கு வாக்குரிமை: பிரதமரின் கருத்துக்கு பால் தாக்கரே எதிர்ப்பு

மும்பை, ஜன. 12: அடுத்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்குள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்
வெளிநாடு வாழ் இந்தியருக்கு வாக்குரிமை: பிரதமரின் கருத்துக்கு பால் தாக்கரே எதிர்ப்பு

மும்பை, ஜன. 12: அடுத்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலுக்குள் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட்ட கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் சிவசேனை கட்சியின் தலைவர் பால் தாக்கரே.

 கட்சியின் பிரசார ஏடான சாம்னாவில் எழுதியுள்ள தலையங்கத்தில் பால் தாக்கரே கூறியுள்ளதாவது:

 வேலைபார்க்கும் நாட்டையே தனது தாயகம் போன்று வெளிநாடு வாழ் இந்தியர்கள் கருத வேண்டும். இல்லையெனில் கூழுக்கும் ஆசை மீசைக்கும் ஆசை என்ற நிலைதான் ஏற்பட்டுவிடும்.

 இந்தியாவில் வசிக்கும் இஸ்லாமியர்களில் ஏராளமானோôர் பாகிஸ்தானுக்கு விசுவாசமாக உள்ளதையும் அதனால் இந்தியா அனுபவித்துவரும் பாதிப்புகளையும் மறந்துவிடக்கூடாது.

 வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை தரும் விவகாரத்தில் பிரதமர் நிதானம் காட்டி மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களிடம் பணம் கொட்டிக் கிடக்கிறது என்பதற்காக அவர்களுக்கு வாக்குரிமை கொடுப்பதை நியாயப்படுத்தி விட முடியாது.

 வெளிநாடுகளில் தங்கியுள்ள நமது மண்ணின் மைந்தர்களிடம் பணத்தை இந்தியா எதிர்பார்க்கவில்லை.

 அவர்கள் இந்தியா வந்து கொஞ்ச காலம் தங்கி தம்மிடம் உள்ள அனுபவம், அறிவை இளைஞர்களுடன் பகிர்ந்து கொண்டு நாடு மேம்பாடு பெற வழிகாட்டியாக திகழவேண்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை தருவதைவிட இதைத்தான் மிக முக்கியமாக நாம் கருதவேண்டும் என்றார் பால் தாக்கரே.

 அண்மையில் தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், வெளிநாடு வாழ் இந்தியர்கள் இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தால் அவர்களுக்கு 2014ல் நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்குள்ளாக வாக்குரிமையை அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று தெரிவித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com