ஹிமாசலப் பிரதேசத்தில் விபத்து: 7 பேர் பலி

சிம்லா, ஜன.12: ஹிமாசலப் பிரதேச மாநிலம் பிலாஸ்புட் மாவட்டத்தில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் செவ்வாய்க்கிழமை 7 பேர் உயிரிழந்தனர். சிம்லாவில் இருந்து வைஷ்ணவ தேவிக்கு செல்லும் பாதையில் பரா
ஹிமாசலப் பிரதேசத்தில் விபத்து: 7 பேர் பலி

சிம்லா, ஜன.12: ஹிமாசலப் பிரதேச மாநிலம் பிலாஸ்புட் மாவட்டத்தில் வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் செவ்வாய்க்கிழமை 7 பேர் உயிரிழந்தனர்.

சிம்லாவில் இருந்து வைஷ்ணவ தேவிக்கு செல்லும் பாதையில் பராரி அருகே ஒரு பாலத்தில் சென்றுகொண்டிருந்த வாகனம், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த வாகனத்தில் பயணம் செய்த 9 பேரில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்தனர் என்று போலீஸôர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com