2 தெலங்கானா அமைச்சர்கள் ராஜிநாமாவை திரும்பப் பெற்றனர்

ஹைதராபாத், ஜன.12: தெலங்கானா பகுதியைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் தங்களுடைய ராஜிநாமாவை செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.  ÷கடந்த 5-ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்துக்குப்ப
2 தெலங்கானா அமைச்சர்கள் ராஜிநாமாவை திரும்பப் பெற்றனர்

ஹைதராபாத், ஜன.12: தெலங்கானா பகுதியைச் சேர்ந்த இரு அமைச்சர்கள் தங்களுடைய ராஜிநாமாவை செவ்வாய்க்கிழமை திரும்பப் பெற்றுக்கொண்டனர்.

 ÷கடந்த 5-ம் தேதி புதுதில்லியில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்துக்குப்பின் தெலங்கானா பகுதியைச் சேர்ந்த 18 அமைச்சர்கள் தங்களுடைய ராஜிநாமாவைத் திரும்பப்பெற்றனர். இந்நிலையில் தெலங்கானா அமைச்சர்களான கோமதிரெட்டி வெங்கட் ரெட்டி, டி.ஸ்ரீதர் பாபு ஆகியோர் செவ்வாய்க்கிழமை தங்களின் ராஜிநாமாவைத் திரும்பப்பெற்றனர்.

÷ஆந்திர மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.ஸ்ரீநிவாஸ் ராஜிநாமாவைத் திரும்பப்பெறுமாறு வலியுறுத்தியதையடுத்து இரு தெலங்கானா அமைச்சர்களும் ராஜிநாமாவைத் திரும்பப்பெற்றனர்.

÷"தனி தெலங்கானா மாநிலம் அமையும் வரை எங்களின் போராட்டம் தொடரும். கடந்த டிசம்பர் 9-ம்தேதி அறிவித்தபடி தனி தெலங்கானா மாநிலத்தை உருவாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்புகிறோம்' என்று ராஜிநாமாவைத் திரும்பப்பெற்ற இரு அமைச்சர்களும் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com