ஜம்மு, ஜன.1: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பொது மக்களில் ஒருவருக்கு முதல் முறையாக போலீஸ்துறையின் வீர விருது அளிக்கப்பட்டது.
பொதுமக்களில் ஒருவருக்கு முதல் முறையாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் போலீஸ்துறை வழங்கும் வீர விருது அளிக்கப்பட்டது. இந்த விருதைப் பெற்றவர் ஒரு பேருந்து ஓட்டுனர். அவர் பெயர் பி.சிங்.
2010-ம் ஆண்டு ஜூலை மாதம் ரஜோரி மாவட்டத்தில் பஸ் ஓட்டிவரும் போது நடந்த பயங்கரவாத தாக்குதலில் சமயோசிதமாக நடந்து கொண்டதால் பல உயிர்களைக் காப்பாற்றினார்.
இந்த துணிச்சலான செய்கைக்காக ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறைத் தலைவர் அவருக்கு பதக்கமும் ரொக்கப்பணமும் பரிசாக அளித்தார். அவருடன்கூட 175 காவல்துறை அதிகாரிகளுக்கும் சிறப்பு போலீஸ் வீர விருது வழங்கப்பட்டது.