சிகரம் தொட்ட முதல் காஷ்மீரி

புதுதில்லி, ஜூலை 3: காஷ்மீர் ராணுவ வீரர் ஒருவர் இமயமலையில் உள்ள 8,000 அடி சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் "உயரமான சிகரத்தைத் தொட்ட முதல் காஷ்மீரி' என்ற பெருமையை இவர் பெறுகிறார்.  உலகின்
Published on
Updated on
1 min read

புதுதில்லி, ஜூலை 3: காஷ்மீர் ராணுவ வீரர் ஒருவர் இமயமலையில் உள்ள 8,000 அடி சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் "உயரமான சிகரத்தைத் தொட்ட முதல் காஷ்மீரி' என்ற பெருமையை இவர் பெறுகிறார்.

 உலகின் 8-வது உயரமான சிகரமாகக் கருதப்படுவது இமயமலையிலுள்ள "மனாஸ்லு' சிகரம். இது நேபாள நாட்டிலுள்ளது. இந்திய ராணுவத்தின் "15-வது ஜம்மு காஷ்மீர் படைப்பிரிவைச் சேர்ந்தவர் ஹவில்தார் ரஃபிக் மாலிக். இவர் கடந்த மே மாதம் 9-ம் தேதி மனாஸ்லு சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளார்.

 இவ்வளவு உயரமான சிகரத்தில் ஏறி சாதனை புரிந்த ராணுவத்தைச் சேர்ந்த முதல் காஷ்மீரி மாலிக்தான் என மலையேற்றக் குழுவின் தலைவர் கர்னல். அஜய் கோத்தியால் தெரிவித்தார்.

 காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தைச் சேர்ந்த மாலிக், தனது பள்ளிப் பருவத்தில் சக மாணவர்களைப் போல் தீவிரவாத இயக்கத்தில் சேராமல் ராணுவத்தில் சேர்வதையே பெரிதும் விரும்பியதாகத் தெரிவித்தார். 1995-ல் ராணுவத்தில் சேர்ந்து பயிற்சி முடித்த பின், மலையேறும் ஆர்வம் காரணமாக குல்மார்க்கில் உள்ள "உயர்தளப் போர்பயிற்சிப் பள்ளியிலும்', பின் டார்ஜிலிங்கிலுள்ள "மலையேற்றப் பயிற்சிப் பள்ளியிலும்' பயிற்சிகளை முடித்தார்.

 பின்னர் பல்வேறு சிகரங்களில் ஏறி சாதனை படைத்த இவர், கடந்த மார்ச் மாதம் தொடங்கிய மனாஸ்லு மலையேற்றக் குழுவில் இடம்பெற்றார். இரு குழுவாகப் பிரிந்து மலையேற்றத்தில் ஈடுபட்டதில் மாலிக் தலைமையிலான குழுவே மே மாதம் 9-ம் தேதி முதலில் "மனாஸ்லு' சிகரத்தைத் தொட்டது.

 இந்தச் சாதனை பற்றி கருத்து தெரிவித்த மாலிக், தான்தான் முதன்முதலில் 8,000 அடி உயர மலைச் சிகரத்தைத் தொட்ட முதல் காஷ்மீரி என்பதைக் கேள்விப்பட்டபோது மிகவும் ஆச்சரியமடைந்ததாகத் தெரிவித்தார்.

 உலகத்தில் மொத்தம் 14 மலைச் சிகரங்களே 8000 அடிக்கும் மேலான உயரமுடையவை. அவற்றில் மனாஸ்லு சிகரமும் ஒன்றாகும். மனாஸ்லு என்ற வார்த்தைக்கு "ஒற்றுமையின் சிகரம்' என்று அர்த்தமாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.