புதுதில்லி,ஜுலை 3 : கோடை விடுமுறைக்கு திங்கள்கிழமை திறக்கப்படும் சிறப்பு நீதிமன்றத்தில் 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் விசாரணை மீண்டும் தொடங்குகிறது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு விவகாரத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் அ ராசா, திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கோடை விடுமுறை காரணமாக இந்த வழக்கில் விசாரணை தடைப்பட்டது. இந்நிலையில் விடுமுறைக்குப் பிறகு, சிறப்பு நீதிமன்றம் திங்கள் கிழமை திறக்கப்படுகிறது.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரம் தொடர்பான வழக்கில் மீண்டும் விசாரணை தில்லி சிறப்பு நீதிமன்றத்தில் தொடங்கிறது. இந்த வழக்கில், சிபிஐ இதுவரை 2 குற்றப் பத்திரிகைகளை தாக்கல் செய்துள்ளது. நீதிபதி ஓ.பி.சைனி முன் ராசா, கனிமொழி உள்ளிட்டோர் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.