பெங்களூர், ஜூலை 9: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தின் வர்த்தகப் பிரிவான ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனத்துக்கு தலைவராக வி.எஸ்.ஹெக்டே நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையத் (இஸ்ரோ) தலைவர் கே.ராதாகிருஷ்ணன் சனிக்கிழமை இதைத் தெரிவித்தார்.வி.எஸ்.ஹெக்டே இப்போது இஸ்ரோவில் அறிவியல் பிரிவுச் செயலராக உள்ளார்.