பூஞ்ச், ஜூலை 9: காஷ்மீர் மாநிலத்தில் பூஞ்ச் எனுமிடத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் வைத்திருந்ததாக 3 பேரை போலீஸôர் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ. 4 ஆயிரம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
போலீஸôருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பூஞ்ச் பகுதியில் சுற்றித் திரிந்த அப்துல் மஜீ, முகமது ஜூபைர், முகமது அகமது ஆகிய மூவரையும் போலீஸôர் கைது செய்து அவர்களிடமிருந்து கள்ள ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இவர்கள் மூவரும் சூரன்கோட் மார்க்கெட் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை நின்றிருந்தனர்.
அப்போது இவர்களிடம் விசாரணை நடத்தி, அவர்களிடமிருந்த கள்ள ரூபாய் நோட்டுகளை போலீஸôர் கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர்.