ராஜ்கோட், ஜூலை 9: குஜராத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். 29 பேர் காயமடைந்தனர்.
ஜாம்நகர் மாவட்டத்தில் தனியார் பேருந்து ஒன்று ஒரு வளைவில் திரும்புபோது தலைகுப்புறக் கவிழ்ந்ததில் பேருந்தில் பயணம் செய்த 6 பேர் உயிரிழந்தனர்.
29 பேர் காயமடைந்தனர். இந்தப் பேருந்து ஜாம்நகரிலிருந்து பவநகருக்குச் செல்லும் வழியில் ஃபல்லா என்ற இடத்தில் கவிழந்ததாக போலீஸôர் தெரிவித்தனர். காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.
ராஜஸ்தானில்: ராஜஸ்தான் மாநிலத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த விபத்தொன்றில் ஒரு குழந்தை உட்பட 3 பெண்கள் உயிரிழந்தனர். பரத்பூர் மாவட்டத்திலுள்ள ரயில்பாதை ஒன்றை இவர்கள் வெள்ளிக்கிழமை மாலை கடக்க முயற்சித்துள்ளனர்.
அப்போது அந்த வழியாக வந்த ரயில் ஒன்று இவர்கள் மீது மோதியதில் அனைவரும் உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்தனர்.