தனி தெலங்கானா: 14-ல் ரயில் மறியல்

ஹைதராபாத், ஜூலை 9: தனித் தெலங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 14-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கூட்டுப் போராட்டக்குழு அறிவித்துள்ளது.  இதுதொடர்பாக கூட்டுப் போராட்டக்குழுவின் தல
Published on
Updated on
1 min read

ஹைதராபாத், ஜூலை 9: தனித் தெலங்கானா மாநில கோரிக்கையை வலியுறுத்தி ஜூலை 14-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என கூட்டுப் போராட்டக்குழு அறிவித்துள்ளது.

 இதுதொடர்பாக கூட்டுப் போராட்டக்குழுவின் தலைவர் எம். கோதண்டராம் ஹைதராபாத்தில் சனிக்கிழமை கூறியதாவது: தனித் தெலங்கானா மாநிலம் அமைக்கக்கோரி நடைபெற்றுவரும் போராட்டத்தை இந்த மண்டலத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஜூலை 12-ம் தேதி தெலங்கானா மாவட்டங்களில் நெடுஞ்சாலைகளில் சமையல் செய்யும் போராட்டம் நடத்தப்படும். அதைத்தொடர்ந்து ஜூலை 14-ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும். ஹைதராபாத் நகரைத் தவிர மற்ற மாவட்டங்களில் இப்போராட்டங்கள் நடைபெறும்.

 மேலும் ஆகஸ்ட் 1-ம் தேதி தெலங்கானா மாவட்டங்களில் பொதுவேலைநிறுத்தம் நடத்தப்படும். அன்று முதல் அரசு ஊழியர்களும் போராட்டத்தில் குதிக்கிறார்கள். இதையடுத்து பல்வேறு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த நோட்டீûஸ அரசிடம் ஜூலை 13-ம் தேதி அளிக்க உள்ளன. இந்த வேலை நிறுத்தத்தில் அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களும், பொதுத்துறை நிறுவனமான சிங்கரேனி நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்களும் ஈடுபடுவார்கள். போராட்டங்களுக்கு பொதுமக்களின் ஆதரவைத் திரட்ட தெலங்கானா பிராந்தியத்தில் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும்.

 சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த அமைச்சர்கள், இனி அரசுப் பணியில் ஈடுபடாமல் புறக்கணிக்க வேண்டும் என்றார் கோதண்டராம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.