பெங்களூர், ஜூலை 9: திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோயில் நகைகள் கடவுளுக்கே சொந்தம் என்று திருவிதாங்கூர் சமஸ்தான அரசி கெüரி லட்சுமிபாய் கூறியுள்ளார்.
உடுப்பி கிருஷ்ணர் கோயிலில் சனிக்கிழமை அவர் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கிருஷ்ண மடத்தின் மடாதிபதியைச் சந்தித்து ஆசி பெற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாப சுவாமி கோயிலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்க ஆபரணங்கள் புதையல் அல்ல. அது சொத்து.
எந்த வகையான சொத்தாக இருந்தாலும், அது கடவுளுக்கே சொந்தம். எனவே, அவற்றை கடவுளிடம் ஒப்படைப்பதே சரியானதாக இருக்கும். உடுப்பி கிருஷ்ணர் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்வது எனது வாடிக்கை. இதில் வேறு சிறப்பு ஏதுமில்லை என்றார்.