புட்டபர்த்தி, ஜூலை 14: சாய்பாபாவின் மகா சமாதி வெள்ளிக்கிழமை முதல் பக்தர்களின் தரிசனத்துக்காக திறக்கப்படுகிறது.
சாய்பாபா கடந்த ஏப்ரல் 24-ல் மரணமடைந்தார். பாபா வாழ்ந்த புட்டபர்த்தி, சாந்தி நிலையத்தில் அவருக்கு மகா சமாதி எழுப்பப்பட்டுள்ளது. வியாழக்கிழமை குருபூர்ணிமாவை முன்னிட்டு அவரது சமாதி பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறக்கப்படுகிறது.இதற்காக ஏராளமான பக்தர்கள் புட்டபர்த்தியில் குவிந்து வருகின்றனர். மகா சமாதி மிக பிரமாண்டமான முறையில் வடிவமைக்கப்படும் என்று சத்ய சாய் பாபா அறக்கட்டளை தெரிவித்துள்ளது.