அலாகாபாதில் சரக்கு ரயில் தடம்புரண்டது

அலகாபாத், ஜூலை 23: அலாகாபாதில் சரக்கு ரயில் தடம்புரண்டது; 24 மணி நேரத்தில் ஒரே இடத்திலேயே இரண்டு ரயில்கள் தடம்புரண்டுள்ளன.  உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத்-வாராணசி ரயில் மார்க்கத்தில் சனிக்கிழமை காலை
Published on
Updated on
1 min read

அலகாபாத், ஜூலை 23: அலாகாபாதில் சரக்கு ரயில் தடம்புரண்டது; 24 மணி நேரத்தில் ஒரே இடத்திலேயே இரண்டு ரயில்கள் தடம்புரண்டுள்ளன.

 உத்தரப் பிரதேச மாநிலம் அலாகாபாத்-வாராணசி ரயில் மார்க்கத்தில் சனிக்கிழமை காலை சரக்கு ரயில் சென்றது. அலகாபாத் சிட்டி ரயில் நிலையத்தைத் தாண்டியதும், அந்த ரயிலின் 8 பெட்டிகள் தடம்புரண்டன.

 இந்த ரயில் சிமெண்ட் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு பிகார் மாநிலத்துக்குச் சென்றுகொண்டிருந்தபோது இந்த விபத்து நடந்துள்ளது. சம்பவம் அறிந்ததும் வடகிழக்கு ரயில்வே அதிகாரிகள் விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.

 சரக்கு ரயில் தடம்புரண்டதால் இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ரயிலின் 8 பெட்டிகள் தண்டவாளத்திலிருந்து இறங்கியுள்ளதால், இந்த மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து சீராவது தாமதமடையும் என்று ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன. இதே இடத்தில்தான் வெள்ளிக்கிழமை காலை சரக்கு ரயில் தடம்புரண்டது. இதையடுத்து ரயில்பாதையை ரயில்வே தொழிலாளர்கள் சீரமைத்தனர். ரயில் போக்குவரத்து சீரடைந்ததையடுத்து ரயில்கள் வழக்கம் போல் இயக்கப்பட்டன.

 ஆனால் அந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்துக்குள்ளாகவே, அதே இடத்தில் மற்றொரு சரக்கு ரயில் தடம்புரண்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.