ஹைதராபாத், ஜூலை 23: தெலங்கான பகுதி எம்எல்ஏக்கள் ராஜிநாமா
கடிதங்களை ஆந்திர மாநில சட்டப்பேரவைத் தலைவர் நடேன்ட்லா மனோகர் நிராகரித்து விட்டார்.
தனித் தெலங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த 12 அமைச்சர்கள் உள்பட 101 பேர் சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை பேரவைத் தலைவர் மனோகரிடம் அளித்திருந்தனர்.
இந்நிலையில் அந்த கடிதங்களை பரிசீலித்த மனோகர் அவை உணர்ச்சி அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை எனக் கூறி சனிக்கிழமை தள்ளுபடி செய்துவிட்டார். லண்டனில் நடைபெறவுள்ள காமன்வெல்த் நாடுகளின் பேரவைத் தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள புறப்படும் முன் இந்த முடிவை அறிவித்து அவர் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.