மும்பை குண்டுவெடிப்பு: பலியானோர் எண்ணிக்கை 22-ஆக உயர்வு

மும்பை, ஜூலை 23: மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.  மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் ஜூலை 13-ம் தேதி அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடித்தன. இதில் சம்பவ இடத்த
Published on
Updated on
1 min read

மும்பை, ஜூலை 23: மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது.

 மகாராஷ்டிர மாநிலம் மும்பை நகரில் ஜூலை 13-ம் தேதி அடுத்தடுத்து 3 இடங்களில் குண்டுவெடித்தன. இதில் சம்பவ இடத்திலேயே 17 பேர் பலியாயினர். 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதில் 4 பேர் இறந்தனர். இதையடுத்து குண்டு வெடிப்பு சம்பவத்தில் பலியானோர் எண்ணிக்கை 21-ஆக இருந்தது.இந்த நிலையில் மும்பை ஜே.ஜே. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுரேந்தர் சிங் (30) என்பவர் சனிக்கிழமை காலை இறந்தார். இதையடுத்து பலியானோர் எண்ணிக்கை 22-ஆக உயர்ந்துள்ளது. இவர் ஜவேரி பஜார் பகுதியில் நடந்த குண்டுவெடிப்பில் காயமடைந்தவர். இன்னும் இதே மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதேபோல ஹர்கிஷண்தாஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 5 பேரின் நிலைமை மோசமாக உள்ளது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.