ஜம்மு, ஜூலை 30: அமர்நாத் குகைக் கோயிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிக்க சனிக்கிழமை காலை 793 பேர் கொண்ட யாத்ரிகர் குழு மலை அடிவாரத்திலிருந்து புறப்பட்டது. இவர்களில் 378 ஆண்களும், 84 பெண்களும், 6 குழந்தைகளும், 325 சாதுக்களும் அடங்குவர்.
பகவதி நகர் மலை அடிவார முகாமிலிருந்து இவர்கள் மிகுந்த பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டனர். 23 வாகனங்களில் புறப்பட்ட இவர்கள் 13,500 அடி உயரம் உள்ள மலைக் கோயிலுக்குச் சென்று பனி லிங்கத்தை தரிசிக்க உள்ளனர். இத்துடன் இதுவரை அமர்நாத் கோயிலுக்குச் சென்றவர்களின் எண்ணிக்கை 74,799 ஆக உயர்ந்தது.