காஷ்மீரில் கடையடைப்பு

ஸ்ரீநகர்,பிப்.11: கடையடைப்புப் போராட்டத்தினால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சனிக்கிழமை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.  ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியினர் இந்த போராட்டத்துக்கு அழைப்ப
Published on
Updated on
1 min read

ஸ்ரீநகர்,பிப்.11: கடையடைப்புப் போராட்டத்தினால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சனிக்கிழமை மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

 ஜம்மு-காஷ்மீர் விடுதலை முன்னணியினர் இந்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். அக்கட்சியின் நிறுவனரான மொகமது மக்பூல் பாட்டின் 28-வது நினைவு தினத்தில் இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

 இந்தப் போராட்டத்துக்கு ஹுரியத் மாநாட்டுக் கட்சியினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

 போராட்டத்தினால் தலைநகரில் உள்ள கடைகள், வங்கிகள், தொழில் நிறுவனங்கள் ஆகியன மூடப்பட்டன. போக்குவரத்து சேவைகளும் நிறுத்தப்பட்டதால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகினர்.

 1984-ம் ஆண்டில், கொலை குற்றத்துக்காக பாட் தில்லி திகார் சிறையில் தூக்கிலடப்பட்டார்.

 காஷ்மீரில் ஜேகேஎல்எஃப் அழைப்பு விடுத்திருந்த

 கடையடைப்புப் போராட்டத்தின்போது வன்முறைச் சம்பவங்கள்

 நிகழாதவாறு சனிக்கிழமை பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட போலீஸார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com