தாணே, பிப்.11: மகாராஷ்டிரத்தில் நடக்க இருக்கும் நகராட்சித் தேர்தலில் சிவ சேனையைத் தோற்கடியுங்கள் என மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை(எம்.என்.எஸ்) கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.
தாணேவில் வெள்ளிக்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டபோது அவர் மேலும் கூறியது:
சிவ சேனையின் ஆட்சிக் காலத்தில் நீங்கள் பட்ட துன்பங்கள் போதும். இது மாற்றத்துக்கான நேரம். இந்த முறை எங்களுக்கு வாய்ப்பளியுங்கள். நாங்கள் சிறந்த மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்றார்.
மகாராஷ்டிரத்தில் 27 நகராட்சித் தலைவர்கள், 309 பஞ்சாயத்து தலைவர்களுக்கு பிப்ரவரி 16-ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது.