ஜெய்ப்பூர், பிப். 11: புதிதாகப் போடப்பட்ட சாலை தரமற்று இருந்ததால் "நொந்து போன' ராஜஸ்தான் பொதுப்பணித் துறை அமைச்சர் பரத் சிங், அந்தச் சாலைக்கான தொடக்க விழாவில் பங்கேற்க மறுத்துவிட்டார்.
தற்போது சாலைகளின் தரம் குறித்து மாநிலம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டுவரும் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: நான் சாலைகளின் தரத்தில் முக்கிய கவனம் செலுத்துகிறேன். பால்னி - லால்க்னி கிராமங்களை இûணைக்கும் புதிய சாலை தரமற்று இருந்ததால், தொடக்க விழாவில் பங்கேற்க மறுத்துவிட்டேன். யாரேனும் உள்ளூர் பிரமுகரை வைத்து திறந்துகொள்ளுங்கள் என்று கூறிவிட்டேன். அந்தச் சாலையின் மாதிரியை எடுத்து ஆய்வகத்துக்கு அனுப்பி தரச்சோதனை செய்யுமாறு தரக் கட்டுப்பாடு குழுவுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்றார் பரத் சிங்.
அமைச்சர் பங்கேற்காததால், அந்தச் சாலையை கிராம பஞ்சாயத்துத் தலைவரான லாடு சிங் வெள்ளிக்கிழமை தொடங்கிவைத்தார்.