ஒளரங்காபாத், பிப். 11: பணக்காரர்கள் இவ்வளவுதான் சொத்து வைத்துக்கொள்ள வேண்டும் என ஒரு வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று சமூக சேவகி மேதா பட்கர் கோரிக்கை விடுத்துள்ளார்.
செய்தியாளர்களிடம் அவர் பேசியபோது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் கூறியது:
நாட்டின் வளம் கொள்ளைபோகாமல் தடுப்பதற்காக, "பணக்காரர்களுக்கான சொத்து வரம்பு' நிர்ணயிக்கப்பட வேண்டும். அந்த வரம்புக்கு மேல் எவரிடமாவது சொத்து இருந்தால், கூடுதல் சொத்துக்கான வரியை வட்டியுடன் அரசுக்கு அவர் செலுத்த வேண்டும்.
மேம்பாட்டுப் பணிகளைக் காரணம் காட்டி 2.36 லட்சம் ஹெக்டேர் நிலங்களை மகாராஷ்டிரம், குஜராத் அரசுகள் கையகப்படுத்த உள்ளன. அதே நேரத்தில் அங்குள்ள அரசியல்வாதிகளுக்குச் சொந்தமான நிலங்கள் கண்டுகொள்ளாமல் விடப்பட்டுள்ளன என்றார் மேதா பட்கர்.