Enable Javscript for better performance
எல்லைப் பிரச்னை குறித்து பேச்சு: சீனாவில் சிவசங்கர் மேனன்- Dinamani

சுடச்சுட

    

    எல்லைப் பிரச்னை குறித்து பேச்சு: சீனாவில் சிவசங்கர் மேனன்

    By dn  |   Published on : 03rd December 2012 01:25 AM  |   அ+அ அ-   |    |  

    shivsha

    எல்லைப் பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை நடத்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஞாயிற்றுக்கிழமை சீனா தலைநகர் பெய்ஜிங் வந்தடைந்தார்.

    கம்யூனிச ஆட்சி நடைபெறும் சீனாவில் சமீபத்தில் அதிகார மாற்றத்துக்கான நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டன.  இதைத் தொடர்ந்து புதிய தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இப்போதைய அதிபர் ஹு ஜிண்டாவ் தலைமையிலான குழு பதவியிலிருந்து இறங்கிய பின், ஜி ஜின்பிங் தலைமையிலான புதிய குழு பொறுப்புக்கு வரவுள்ளது. இந்நிலையில், சிவசங்கர் மேனனின் சீன வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

    இப்போதைய துணைப் பிரதமரும், அடுத்த பிரதமராக மார்ச்சில் பொறுப்பேற்க உள்ளவருமான லீ கெஹியாங்கை, சிவசங்கர் மேனன் திங்கள்கிழமை சந்தித்துப் பேசவுள்ளார். பின்னர் சீன அரசு ஆலோசகர் தாய்பிங்குவோவை சந்தித்து, எல்லைப் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து சிவசங்கர் மேனன் பேச்சு நடத்துவார்.

    இருதரப்பு உறவுகள் தொடர்பாக இதுவரை 15 சுற்று பேச்சுவார்த்தைக் கூட்டங்கள் நடைபெற்றுள்ளன. தாய்பிங்குவோ மார்ச் மாதம் பதவியிலிருந்து ஓய்வுபெறுவதால், அவருடனான சிவசங்கர் மேனனின் சந்திப்பு, 16ஆவது சுற்றுப் பேச்சுவார்த்தையாகக் கருதப்பட மாட்டாது.

    டிசம்பர் 4ஆம் தேதி பெய்ஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெறவுள்ள இந்திய-சீன உறவுகள் குறித்த கருத்தரங்கில் சிவசங்கர் பங்கேற்கவுள்ளார்.

    kattana sevai