சுடச்சுட

  
  rings

  இந்திய ஒலிம்பிக் சங்கத்தை (ஐஓஏ) சர்வதேச ஒலிம்பிக் சங்கம் (ஐஓசி) சஸ்பெண்ட் செய்துள்ளது.

  இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தலில் அரசின் தலையீடு, தங்கள் வழிகாட்டுதலின்படி இல்லாமல் இந்திய அரசின் வழிகாட்டுதல்படி செயல்பட்டது உள்ளிட்ட காரணத்தால் இந்த அதிரடி நடவடிக்கையை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எடுத்துள்ளது.

  இது தொடர்பாக பலமுறை சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எச்சரிக்கை விடுத்து வந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் நிர்வாகிகள் கூட்டத்தில், இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்யும் அதிரடி முடிவு எடுக்கப்பட்டது. எனினும் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

  இந்த சஸ்பெண்ட் நடவடிக்கையால் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் நிதியை இந்தியா பெற முடியாது. சர்வதேச சங்கம் நடத்தும் கூட்டங்கள், நிகழ்ச்சிகளில் இந்திய ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் பங்கேற்க முடியாது. இந்திய தடகள வீரர்கள் நமது தேசிய கொடியின் கீழ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க முடியாது. இருப்பினும் ஐஓசி கொடியின்கீழ் போட்டிகளில் பங்கேற்கலாம்.

  இந்திய ஒலிம்பிக் சங்கத் தேர்தல் புதன்கிழமை நடைபெறவுள்ள நிலையில் இத்தகவல் வெளியாகியுள்ளதால், தேர்தல் நடத்தப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.

  இதற்கு முன்னர், இனப்பாகுபாடு காரணமாக தென்னாப்பிரிக்கா சஸ்பெண்ட் செய்யப்பட்டது. அரசு தலையீடு காரணமாக குவைத்தும் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்தது. தேசிய ஒலிம்பிக் சங்கம் அமைக்காததால் நெதர்லாந்து, தெற்கு சூடான் ஆகிய நாடுகளும் சஸ்பெண்ட் செய்யப்பட்டன.

   

  எந்தத் தகவலும் கிடைக்கவில்லை

   

  "இது தொடர்பாக எனக்கு இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை' என்று இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் (பொறுப்பு) விஜய் மல்ஹோத்ரா கூறியுள்ளார். அவர் மேலும் கூறியதாவது:

  சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் (ஐஓசி) முடிவை எதிர்த்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்திடம் முறையிடலாம். சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் விதிமுறைகள் குறித்து பிரதமருக்கு கடந்த நவம்பர் 23ஆம் தேதியே கடிதம் மூலம் தெரிவித்திருந்தோம். ஆனால் பிரதமர் அலுவலகத்திலிருந்து எவ்வித முறைப்படி பதிலும் வரவில்லை. இப்போது ஏற்பட்டுள்ள நிலைமைக்கு அரசுதான் பொறுப்பு. மத்திய அரசும், சர்வதேச ஒலிம்பிக் சங்கமும் கூடிப் பேசினால் இதற்கு தீர்வு கிடைக்கும். அதன் பிறகு இந்தியா மீதான தடை நீக்கப்படலாம்.

  உயர் நீதிமன்ற உத்தரவு இருப்பதால் ஐஓசி விதிகளின்படி தேர்தல் நடத்த முடியாது என்றார் அவர்.

   

  ரந்தீர் சிங்தான் காரணம்

  இந்திய ஒலிம்பிக் சங்கம் சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கு மூல காரணமே ரந்தீர் சிங்தான் என்று ஐஓஏ தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அபய் சிங் செüதாலா குற்றம் சாட்டினார். சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தின் முன்னாள் செயலரான ரந்தீர்சிங் இப்போது குழு உறுப்பினராக உள்ளார். தனது பதவியைத் தக்கவைத்துக் கொள்ள ரந்தீர் சிங் எதையும் செய்வார் என்றும் சௌதாலா கூறினார். சர்வதேச ஒலிம்பிக் சங்கத்திலிருந்து அவரைத் திரும்பப்பெறுவது தொடர்பான தீர்மானம் புதன்கிழமை நடைபெற உள்ள இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் அவசரக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என்று அவர் கூறினார்.

   

  சர்வதேச ஒலிம்பிக் சங்கம் எடுத்துள்ள முடிவு மிகவும் துரதிருஷ்ட வசமானது. இந்திய விளையாட்டு வீரர்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். - மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் ஜிதேந்திர சிங்

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai