Enable Javscript for better performance
இமாசலப் பிரதேச முதல்வராக வீரபத்ர சிங் நாளை பதவியேற்பு- Dinamani

சுடச்சுட

    

    இமாசலப் பிரதேச முதல்வராக வீரபத்ர சிங் நாளை பதவியேற்பு

    By dn  |   Published on : 24th December 2012 05:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    veera

    இமாசலப் பிரதேச முதல்வராக வீரபத்ர சிங் ஆறாவது முறையாக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 25) பதவியேற்க உள்ளார்.

    மலை மாநிலமான இமாசலப் பிரதேச சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 4ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.

    இத்தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 20ஆம் தேதி எண்ணப்பட்டன. மொத்தமுள்ள 68 இடங்களில் காங்கிரஸ் 36 இடங்களைக் கைப்பற்றி, ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் கட்சியின் வெற்றிக்கு வழிவகுத்தவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான வீரபத்ர சிங்(78), மாநில எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டார். அவரை, மேலிடப் பொறுப்பாளரும் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான ஜனார்தன் துவிவேதி சனிக்கிழமை சந்தித்து முக்கிய விவாதம் நடத்தினார்.

    இந்நிலையில், மாநில முதல்வராகப் பதவியேற்க வருமாறு வீரபத்ர சிங்கை மாநில ஆளுநர் ஊர்மிளா சிங் அழைப்பு விடுத்துள்ளார்.

    வீரபத்ர சிங் செவ்வாய்க்கிழமை முதல்வராகப் பதவியேற்க உள்ளார்.

    அதைத் தொடர்ந்து கட்சி மேலிடத்தை கலந்தாலோசித்த பிறகு மற்ற அமைச்சர்களை அவர் தேர்வு செய்ய உள்ளார். இதனிடையே, வீரபத்ர சிங் ஞாயிற்றுக்கிழமை மாலையில் தில்லி புறப்பட்டுச் சென்றார். அமைச்சரவை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் விவாதிக்கவே இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டுள்ளார். முன்னதாக, காங்கிரஸ் வெற்றி பெற்றால் அமைச்சராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட அக்கட்சியின் மூத்த தலைவர்களான கங்கு ராம், ரங்கீலா ராம் ராவ், குல்தீப் சிங் பதானியா, விஜய் சிங் மங்கோட்டியா மற்றும் சுபாஷ் மங்கலாடே ஆகியோர் இந்த சட்டசபைத் தேர்தலில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai