Enable Javscript for better performance
அப்சல் குருவுக்கு தூக்கு எப்போது? மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா பதில்- Dinamani

சுடச்சுட

    

    அப்சல் குருவுக்கு தூக்கு எப்போது? மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா பதில்

    By dn  |   Published on : 24th November 2012 03:00 AM  |   அ+அ அ-   |    |  

    ""நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் நீதி நிலைநாட்டப்படும்,'' என,மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா கூறினார்.

    இது குறித்து நாடாளுமன்றத்துக்கு வெளியே அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: அப்சல் குருவுக்குப் பிறகு தண்டனை அளிக்கப்பட்ட அஜ்மல் கசாபுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. ஆனால், அப்சல் குருவுக்கு தண்டனையை நிறைவேற்றாமல், தாமதப்படுத்துவது ஏன்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது.

    என்னைப் பொறுத்த வரையில், நீதிமன்றம் ஏற்கனவே முடிவு செய்து விட்டது. உச்ச நீதி மன்றம் தனது தீர்ப்பை வழங்கி விட்டது. இந்த விவகாரம் தற்போது மத்திய உள்துறை அமைச்சகத்தில் நிலுவையில் உள்ளது. அப்சல் குருவின் கருணை மனுவை, பரிசீலனைக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு குடியரசுத் தலைவர் திருப்பி அனுப்பியுள்ளார்.

    பொறுத்திருங்கள், நீதி நிலைநாட்டப்படும் என்றார்.

    முன்னதாக, பாரதிய ஜனதா கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங் ஆகியோர் அப்சல் குருவுக்கு தண்டனை நிறைவேற்றுவதை தாமதப்படுத்தக் கூடாது. சீக்கிரமே தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தனர். நாடாளுமன்ற தாக்குதல் பயங்கரவாதி அப்சல் குருவுக்கு 2004-ல் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர் உள்பட மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் பலர்,குடியரசு தலைவருக்கு கருணை மனு அனுப்பினர். குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, தனது அலுவலகத்தில் நிலுவையில் இருந்த அனைத்து கருணை மனுக்களையும்,புதிய உள்துறை அமைச்சர் பொறுப்பேற்றுள்ளதால்,நடைமுறைப்படி பரிசீலனைக்காக திருப்பி அனுப்பி வைத்துள்ளார். உள்துறை அமைச்சகத்தில் தற்போது 7 கருணை மனுக்கள் பரிசீலனைக்காக காத்திருக்கின்றன.

    kattana sevai