Enable Javscript for better performance
சிஏஜியின் 2ஜி அறிக்கை: சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும்: முரளிமனோகர் ஜோஷி- Dinamani

சுடச்சுட

    

    சிஏஜியின் 2ஜி அறிக்கை: சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும்: முரளிமனோகர் ஜோஷி

    By dn  |   Published on : 24th November 2012 04:35 AM  |   அ+அ அ-   |    |  

    muralimjoshi

    பா.ஜ.க.வின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி கூறுகையில், ""2ஜி அறிக்கை தயாரிக்கப்பட்டபோது நான் எவ்வித நெருக்குதலும் தரவில்லை.

    அப்படி நான் செய்திருந்தால், அது குறித்து பி.ஏ.சி. முன்பு ஆஜரானபோது ஆர்.பி.சிங் ஏன் கூறவில்லை? இப்போது அவர் அது பற்றிப் பேசுவது ஏன்? அவர் தனது பணி ஓய்வுக்குப் பிறகும் இதேபோன்ற கருத்தை வெளியிட்டார். நாங்கள் அதுபற்றிக் கேட்டபோது அப்படி எந்தவொரு பேட்டியையும் தரவில்லை என்று அவர் எங்களிடம் தெரிவித்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக அவரை நாடாளுமன்றக் கூட்டுக்குழுவும் விசாரித்தது. ஆனால் அவரால் தனது புகார் குறித்து எதையும் நிரூபிக்க முடியவில்லை. எங்கள் கட்சி மீது புகார் கூறியதற்காக சோனியா மன்னிப்பு கேட்க வேண்டும். ஆர்.பி.சிங் கூறிய குற்றச்சாட்டு நிரூபணமானால், பி.ஏ.சி. தலைவர் பதவியை விட்டு விலகுவேன்'' என்று தெரிவித்தார்.

    kattana sevai