Enable Javscript for better performance
கேஸ் சிலிண்டர் கட்டுப்பாட்டால் மதிய உணவுத் திட்டம் பாதிக்கப்படும்- Dinamani

சுடச்சுட

    

    கேஸ் சிலிண்டர் கட்டுப்பாட்டால் மதிய உணவுத் திட்டம் பாதிக்கப்படும்

    By dn  |   Published on : 05th October 2012 12:48 AM  |   அ+அ அ-   |    |  

    mamata

    கேஸ் சிலிண்டர் விநியோகத்துக்கு மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாட்டால் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் பாதிக்கப்படும் என்று மம்தா கவலை தெரிவித்துள்ளார்.

    இது குறித்தெல்லாம் சிந்திக்காமல் மத்திய அரசு தனது கொடுமையான நடவடிக்கைகளைத் தொடர்கிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

    தனது ஃபேஸ்புக் பக்கத்தில் இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: ஏழைக் குழந்தைகள் பலர் பள்ளிகளில் உள்ள மதிய உணவுத் திட்டத்தில்தான் அதிகம் பயனடைந்து வருகின்றனர்.

    கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் மத்திய அரசு விதித்துள்ள கட்டுப்பாடு, மதிய உணவுத் திட்டத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

    இது மிகவும் முக்கியமான பிரச்னை. ஆனால் ஏழை மாணவர்களைப் பற்றி மத்திய அரசு சிறிதும் யோசிக்கவில்லை.

    கேஸ் சிலிண்டரை சந்தை விலையில்தான் பொதுமக்கள் வாங்க வேண்டுமென்று மத்திய அரசு கூறியுள்ளது. இனி மாதம்தோறும் அதன் விலையை ஏற்றிக் கொண்டே செல்வார்கள். இதனால் அனைத்துப் பொருள்களின் விலையும் உயரும்.

    இதுதான் மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கையால் மக்களுக்குக் கிடைக்கும் பலன். சீர்திருத்தம் என்ற பெயரில் கொள்ளை நடக்கிறது. அதனை மறைக்க பல்வேறு பொய்களைக் கூறி வருகின்றனர். மத்திய அரசின் இதுபோன்ற நியாயமற்ற நடவடிக்கைகளை எதிர்த்து நாம் தொடர்ந்து போராட வேண்டும் என்று மம்தா அழைப்பு விடுத்துள்ளார்.

    kattana sevai