Enable Javscript for better performance
\\\"மோடியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது\\\'- Dinamani

சுடச்சுட

    

    "மோடியின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது'

    By dn  |   Published on : 05th October 2012 11:40 PM  |   அ+அ அ-   |    |  

    bal

    குஜராத் சட்டப் பேரவைத் தேர்தலில் முதல்வர் நரேந்திர மோடி வெற்றி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது என சிவசேனை கட்சித் தலைவர் பால் தாக்கரே கருத்து தெரிவித்திருக்கிறார்.

    குஜராத்தில் டிசம்பர் மாதம் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. பாரதிய ஜனதா கட்சிக்கும் காங்கிரஸýக்கும் அங்கு நேரடிப் போட்டி. இந்த தேர்தலைக் குறித்து சிவசேனை கட்சியின் தினசரியான "ஸாம்னா'வில் பால் தாக்கரே தலையங்கம் எழுதியுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டிருப்பது:

    கடந்த 10 ஆண்டுகளாக நரேந்திர மோடியின் தலைமையில் குஜராத் அபார வளர்ச்சி வெற்றி பெற்றிருப்பதால் அந்த மாநிலத்தை அவர் தனது கைக்குள் வைத்திருக்கிறார். அவரது வெற்றி நடையை யாராலும் தடுக்க முடியாது.

    அவரை ஒரு அசுரனைப் போல ஊடகங்கள் சித்திரிக்கின்றன. ஆனால் சென்ற தேர்தலில் 121 இடங்களை பாஜக பெற்றபோது, காங்கிரஸ் 55 இடங்கள் மட்டுமே பெற்றது. சோனியா காந்தி சமீபத்தில் குஜராத்தில் பொதுக்கூட்டத்தில் பேசும்போது முதல்வர் மோடியின் பெயரைக் குறிப்பிடுவதையே தவிர்த்துவிட்டார். தேர்தல் நடப்பதற்கு முன்பே காங்கிரஸ் தனது தோல்வியை ஒப்புக் கொண்டுவிட்டது.

    மோடி, தொடர்ந்து மூன்றாவது முறையாக பேரவைத் தேர்தலில் வென்று, "ஹாட்ரிக்' எடுப்பது உறுதி என தாக்கரே எழுதியுள்ளார்.

    kattana sevai