Enable Javscript for better performance
இன்று கர்நாடக பந்த்- Dinamani

சுடச்சுட

    

    இன்று கர்நாடக பந்த்

    By dn  |   Published on : 06th October 2012 04:37 AM  |   அ+அ அ-   |    |  

    காவிரியில் தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடுவதைக் கண்டித்து, கர்நாடக மாநிலத்தில் சனிக்கிழமை (அக்டோபர் 6) முழு அடைப்புப் போராட்டம் நடத்த அனைத்துக் கன்னட அமைப்புகளும் அழைப்பு விடுத்துள்ளன.

    காவிரி நதி நீர் ஆணையத்தின் தீர்ப்புப்படி, காவிரியில் இருந்து தமிழகத்துக்கு நாள்தோறும் வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்துவிட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி முதல்

    கர்நாடக அரசு தண்ணீர் திறந்துவிட்டுள்ளது.

    இதைக் கண்டித்து கர்நாடகத்தில் சனிக்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்த கன்னட சலுவளி கட்சியின் தலைமையிலான அனைத்துக் கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி சனிக்கிழமை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 12 மணி நேர முழு அடைப்புப் போராட்டம் நடத்தப்படவுள்ளது.

    போராட்டத்துக்கு ஆதரவு: முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாஜக, காங்கிரஸ், மஜத, காவிரி நதி நீர் பாதுகாப்புக் குழு, கர்நாடக ரக்ஷண வேதிகே, கன்னட சேனே, ஜெயகர்நாடகா உள்ளிட்ட கன்னட அமைப்புகள், அரசு ஊழியர்கள் சங்கம், போக்குவரத்துக் கழக ஊழியர்கள் உள்ளிட்ட ஏராளமான அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

    சேவைகள் பாதிக்கும்: முழு அடைப்புப் போராட்டத்தையொட்டி, ரயில், பஸ், ஆட்டோக்கள் ஓடாது. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருக்கும்.

    kattana sevai