Enable Javscript for better performance
பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல்: சோனியா- Dinamani

சுடச்சுட

    

    பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல்: சோனியா

    By dn  |   Published on : 19th October 2012 08:56 PM  |   அ+அ அ-   |    |  

    sonia

    ஊழலை ஒழிப்பதற்கு பாஜக எதுவும் செய்யவில்லை; பாஜக ஆளும் மாநிலங்களில் ஊழல் நிறைந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குற்றம் சுமத்தியுள்ளார்.

    கர்நாடக மாநிலம், மங்களூரில் வியாழக்கிழமை நடைபெற்ற பொது நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற சோனியா காந்தி இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறியது:

    ஊழல் என்பது புற்றுநோய் போன்றது. அதன்மூலம் ஏழைகளே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர்.

    ஊழலை ஒழிப்பதற்கு அதிகமாகப் போராடியது ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. ஊழலுக்கு எதிரான ஒரு உண்மையான போராட்டம் வேண்டும் என்பதினால்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை நாங்கள் அமல்படுத்தினோம். அதனால் நிறைய ஊழல் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது.

    ஊழலை ஒழிக்கப் போராடி வருவதாக பாஜக நடித்து வருகிறது.

    கர்நாடகம், மத்தியப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் ஊழல் நிறைந்த அரசை பாஜக நடத்தி வருகிறது. இது குறித்து மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும்.

    ஊழலை ஒழிப்பதற்கான லோக்பால் சட்டத்தை நிறைவேற்ற காங்கிரஸ் விரும்பியது. அதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. பாஜகவினால்தான் மாநிலங்களவையில் நிறைவேறவில்லை.

    சமூகத்தை பாஜக பல்வேறு பிரிவுகளாகப் பிரிக்க முயல்கிறது.

    இதுபோன்ற வகுப்புவாத சக்திகளை எதிர்த்து காங்கிரஸ் போராடி வருகிறது. வகுப்புவாத சக்திகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும் என்று தெரிவித்தார். கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.

    இதைக்கருத்தில் கொண்டு பேசிய சோனியா, ஆளும் அரசினால் கர்நாடக மக்கள் மகிழ்ச்சியாக இல்லை. ஆளும் அரசுக்கு வருகின்ற தேர்தலில் மக்கள் தகுந்த பதில் அளிப்பர் என்று நம்புவதாகத் தெரிவித்தார்.

    kattana sevai