Enable Javscript for better performance
எதற்காக புதிய கட்சி? எடியூரப்பா விளக்கம்- Dinamani

சுடச்சுட

    

    எதற்காக புதிய கட்சி? எடியூரப்பா விளக்கம்

    By dn  |   Published on : 26th October 2012 01:00 AM  |   அ+அ அ-   |    |  

    yedurpa

    அதிமுகவை போல அரசியலில் சாதிக்கவே மாநிலக் கட்சி தொடங்குகிறேன் என்று, கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.

    பாஜகவில் அதிருப்தி அடைந்துள்ள முன்னாள் முதல்வர் எடியூரப்பா, கர்நாடக மாநிலம், ஹாவேரியில் டிசம்பர் 10-ஆம் தேதி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவிருப்பதாக அறிவித்துள்ளார்.

    புதிய கட்சியின் பணிகளை தொடங்கும் வகையில், சாம்ராஜ்நகர் மாவட்டத்துக்கு வியாழக்கிழமை வருகை தந்த எடியூரப்பாவுக்கு அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பளித்தனர். அப்போது, கூட்டுறவுத் துறை அமைச்சர் புட்டசாமி, எம்.எல்.சி. எம்.டி.லட்சுமிநாராயணா, முன்னாள் எம்.எல்.ஏ. பரிமளாநாகப்பா, பாஜக நிர்வாகிகள் கே.பி.மகாதேவசுவாமி, நிரஞ்சன்குமார், உம்மத்தூர், இந்துசேகர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    பின்னர், செய்தியாளர்களிடம் எடியூரப்பா கூறியது: அதிமுக, திமுக, பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜவாதி கட்சி, தெலுங்கு தேசம், திரிணமூல் கட்சி போன்ற மாநிலக் கட்சிகள், தேசிய அளவில் புகழ்பெற்றுள்ளதோடு, தங்கள் மாநில நலனைப் பாதுகாப்பதில் வெற்றி அடைந்

    துள்ளன.

    இந்தக் கட்சிகளின் அரசியல் சாதனைகளைப் பின் தொடர்ந்து, நானும் மாநிலக் கட்சியைத் தொடங்கவுள்ளேன். எல்லா சமுதாயத்தினரின் நலன் காக்க, புதிய கட்சியைத் தொடங்குகிறேன். இதற்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.

    kattana sevai