Enable Javscript for better performance
பெட்ரோல் விலை 30 பைசா உயருகிறது- Dinamani

சுடச்சுட

    

    பெட்ரோல் விலை 30 பைசா உயருகிறது

    By dn  |   Published on : 26th October 2012 04:20 AM  |   அ+அ அ-   |    |  

    petrol

    பெட்ரோல் விலையை லிட்டருக்கு 30 பைசாவும், டீசல் விலையை லிட்டருக்கு 18 பைசாவும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    பெட்ரோல் நிலைய உரிமையாளர்களுக்கான கமிஷன் தொகையை அதிகரிக்க மத்திய அரசு வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன்காரணமாகவே விலையை உயர்த்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக மத்திய பெட்ரோலிய அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

    விலை உயர்வு வியாழக்கிழமை நள்ளிரவோ அல்லது வெள்ளிக்கிழமை நள்ளிரவோ அமலுக்கு வரும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

    இப்போது ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.1.49 கமிஷனாக வழங்கப்படுகிறது. இதனை ரூ.1.79 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் ஒரு லிட்டர் டீசலுக்கான கமிஷன் 91 பைசாவிலிருந்து ரூ.1.09 ஆக உயர்த்தப்படுகிறது.

    இது குறித்து அகில இந்திய பெட்ரோலிய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் அஜய் பன்சல் செய்தியாளர்களிடம் கூறும்போது, பெட்ரோலுக்கான கமிஷன் தொகையை 67 பைசாவும், டீசலுக்கு 42 பைசாவும் உயர்த்தி வழங்க கோரிக்கை விடுத்தோம், எங்கள் கோரிக்கை முழுமையாக நிறைவேறவில்லை என்று தெரிவித்தார். 2011 ஜூலையில் பெட்ரோலுக்கான கமிஷன் தொகை 28 பைசாவும், டீசலுக்கான கமிஷன் தொகை 15.5 பைசாவும் உயர்த்தப்பட்டது நினைவுகூரத்தக்கது.

    kattana sevai