சுடச்சுட

    

    அஜீத் பவார் உண்ணாவிரதம் ஒரு நாடகம்: எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

    By dn  |   Published on : 16th April 2013 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் உண்ணாவிரதம் ஒரு நாடகம் என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    வறட்சி மற்றும் மின் பற்றாக்குறை குறித்து அஜீத் பவார் கூறிய கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின. இதையடுத்து அவர் மன்னிப்பு கோரினார். இந்நிலையில் மகாராஷ்டிர பேரவையில் திங்கள்கிழமை எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் கட்சே பேசியதாவது: அஜீத் பவார் உண்ணாவிரதம் ஒரு நாடகமாகும். அவரது கருத்துக்கு பரிகாரம் அவர் பதவி விலகுவது தான். முதல்வர் பிரிதிவிராஜ் சவாண் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

    வெளிநடப்பு: இந்நிலையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிரீஷ் பாபட், சுதிர் முங்கன்திவார், உள்ளிட்டோர் அஜீத் பவார் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் எனக் கேட்டனர். அதற்கு கேள்வி நேரத்துக்கு பின் விவாதம் நடத்தலாம் என அவர் கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai