ஆசிய வளர்ச்சி வங்கியின் புதிய தலைவராக ஜப்பான் நாட்டவர் தேர்வு

ஆசிய வளர்ச்சி வங்கியின் புதிய தலைவராக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தகேகிகோ நகாவோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

ஆசிய வளர்ச்சி வங்கியின் புதிய தலைவராக ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தகேகிகோ நகாவோ தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பிலிப்பின்ஸ் தலைநகர் மணிலாவில் ஆசிய வளர்ச்சி வங்கி இயங்கி வருகிறது. ஜப்பான் நாட்டின் நிதித்துறை முன்னாள் துணை அமைச்சர் தகேகிகோ நகாவோ அவ்வங்கியின் 9-வது தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். வரும் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் வரை நகாவோ பதவி வகிப்பார்.

ஆசிய கண்டத்தின் 67 நாடுகளை உறுப்பினர்களாக கொண்ட ஆசிய வளர்ச்சி வங்கி கடனுதவி, தொழில்நுட்ப உதவிகளை உறுப்பினர்களுக்கு வழங்குகிறது.

இதுதொடர்பாக ப.சிதம்பரம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சர்வதேச பொருளாதார அரங்கிலும், நிதி நிர்வாகத்திலும், ஆசிய அளவில் நிலவும் பிரச்னைகள் குறித்த அனுபவ அறிவும் உள்ள நகாவோ புதிய தலைவராக பொறுப்பேற்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் வறுமையை ஒழிக்க உதவும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com