ரம்ஜான் பண்டிகை பரிசாக மனைவிக்கு ரூ.1 லட்சம் அனுப்பிய பட்கல்
By dn | Published on : 31st August 2013 01:07 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் உள்ள தனது மனைவிக்கு ரூ.1 லட்சத்தை பரிசாக அனுப்பியுள்ளார் பயங்கரவாதி யாசின் பட்கல்.
இதன் மூலம் அவரது செயல்பாடுகளைக் கண்காணித்து வரை கைது செய்ய போலீஸாருக்கு உளவுத் துறை உதவியது.
அவர் தனது மனைவிக்கு வங்கி மூலம் ரூ.1 லட்சம் பணம் அனுப்பியுள்ளார். இதனைக் கண்காணித்த இந்திய உளவுத் துறை, மீண்டும் பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபடுவதற்காக பட்கல் இந்தியாவுக்கு திரும்ப வாய்ப்பு உள்ளது என்பதை சரியாகக் கணித்தது. இதன்படியே நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்குள் நுழைந்த அவர் கைது செய்யப்பட்டார்.
30-வயதாகும் யாசின் பட்கலுக்கு இந்தியாவில் ஆமதாபாத், சூரத், பெங்களூரு, புணே, தில்லி, ஹைதராபாத் உள்ளிட்ட 12 இடங்களில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடையவர்.