Enable Javscript for better performance
விரைவு நீதிமன்றத்தில் தேஜ்பால் மீதான வழக்கு விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    விரைவு நீதிமன்றத்தில் தேஜ்பால் மீதான வழக்கு விசாரணை

    By dn  |   Published on : 06th December 2013 02:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    manoharparikkar

    தெஹல்கா பத்திரிகை முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் மீதான வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடத்தப்படும் என்று கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

    தில்லியில் மனோகர் பாரிக்கர் செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

    தேஜ்பால் மீதான வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடத்தப்படும். உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்படி, இந்த வழக்கு விசாரணையை பெண் நீதிபதி நடத்துவார். அந்தப் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு (பெண் நிருபருக்கு) நீதி கிடைப்பதை உறுதி செய்வேன். தேஜ்பாலின் முந்தைய நடவடிக்கையை கருத்தில் கொண்டு, அவர் மோசமாகவோ அல்லது வித்தியாசமான முறையிலோ நடத்தப்படுவார் என்று யாரும் கவலைப்படத் தேவையில்லை என்றார்.

    போலீஸிடம் வாக்குமூலம்: இதனிடையே போலீஸ் காவலில் இருக்கும் தேஜ்பாலிடம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சம்மி டவரஸ் முன்னிலையில் விசாரணை அதிகாரி சுனிதா சவந்த் தலைமையிலான குழுவினர் வாக்குமூலத்தைப் பதிவு செய்தனர். அப்போது, பெண் நிருபரை தாம் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும், அவரது சம்மதத்துடனே அனைத்தும் நடைபெற்றதென்றும் தேஜ்பால் தெரிவித்துள்ளார். பெண் நிருபர் மற்றும் தெஹல்கா முன்னாள் நிர்வாக ஆசிரியர் ஷோமா சௌத்ரி ஆகியோருக்கு தாம் மின்னஞ்சல்கள் அனுப்பியதையும் தேஜ்பால் போலீஸிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

    ஆனால், தேஜ்பால் வாக்குமூலம் குறித்து அவரது வழக்குரைஞரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அதற்கு பதில் அளிக்க அவர் மறுத்து விட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai