மைசூர் அரச குடும்ப வாரிசு: ஸ்ரீ கண்டதத்த நரசிம்மராஜ உடையார் காலமானார்

மைசூர் அரச குடும்ப வாரிசு ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் (60) பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானார்.
மைசூர் அரச குடும்ப வாரிசு: ஸ்ரீ கண்டதத்த நரசிம்மராஜ உடையார் காலமானார்

மைசூர் அரச குடும்ப வாரிசு ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் (60) பெங்களூருவில் செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் காலமானார்.

மைசூரை 1399 முதல் 1950-ஆம் ஆண்டு வரை உடையார் பரம்பரையைச் சேர்ந்த மன்னர்கள் ஆட்சி செய்தனர். இவர்களில் கடைசி மன்னரான ஜெயசாம்ராஜ் உடையாரின் இரண்டாவது மனைவி மகாராணி திரிபுரசுந்தரியின் மகனான ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையார் 1953, பிப்ரவரி 23-ஆம் தேதி மைசூரில் பிறந்தார்.

மைசூரில் பள்ளிப் படிப்பையும், உயர் கல்வியை மைசூர் பல்கலைக்கழகத்திலும் படித்தார். கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ள நரசிம்மராஜ உடையார், 1976-ஆம் ஆண்டு, பிரமோத தேவியை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு குழந்தைகள் இல்லை.

புகழ் பெற்ற தசரா திருவிழாவின் போது, மன்னர் ஜெயசாம்ராஜ் உடையார் இறந்த பிறகு, 1974-ம் ஆண்டு முதல் அவரது பொறுப்புகளை நரசிம்மராஜ உடையார் கவனித்து வந்தார்.

மைசூர் மக்களவைத் தொகுதி உறுப்பினராக 4 முறை தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், அண்மையில் கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

பெங்களூரு அரண்மனையில் தங்கியிருந்த அவருக்கு, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டது. அதையடுத்து, தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அவரது உடலுக்கு கர்நாடக ஆளுநர் பரத்வாஜ், மாநில அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், யு.டி.காதர் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர். அவரது மறைவையொட்டி, கர்நாடகத்தில் அரசு சார்பில் செவ்வாய், புதன் ஆகிய இரண்டு நாள்களும் துக்கம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இதையொட்டி, பள்ளி, கல்லூரிகளுக்கு புதன்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூருவிலிருந்து மைசூருக்கு அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு, மன்னர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படும் மனுவனத்தில் புதன்கிழமை இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com